பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இடமாற்றங்களுக்கான தரநிலைகள், காலக்கெடு மற்றும் பொறுப்புணர்வை அமைக்க ஒரு தேசிய கட்டமைப்பைச் செயல்படுத்த உள்ளது.
புலிகள் வளங்காப்பகங்களிலிருந்து வனவாசி சமூகங்களை இடமாற்றம் செய்வது தன்னார்வ அடிப்படையிலானதாகவும், விதிவிலக்கு அடிப்படையிலானதாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.
ஒரு தேசிய தரவு தளம் அனைத்து இடமாற்றங்கள், இழப்பீடு மற்றும் இடமாற்றத்திற்குப் பிந்தைய நிலையைப் பதிவு செய்து கண்காணிக்கும்.
வருடாந்திர சுயாதீனத் தணிக்கைகள் இந்த நடவடிக்கைகள் வன உரிமைகள் சட்டம், 2006 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 ஆகியவற்றுடன் இணங்கப் படுவதைச் சரிபார்க்கும்.
கிராமங்கள் தங்கள் தனிப்பட்ட வன உரிமைகள் அல்லது சமூக வன உரிமைகளைப் பயன்படுத்துவதோடு, காடுகளில் தொடர்ந்து வசிக்கலாம்.
இடமாற்றத்திற்கான ஒப்புதல் சுதந்திரமானதாகவும், தகவலறிந்ததாகவும், வட்டார மொழியில் வழங்கப்பட்டதாகவும், சுயாதீன உரிமையியல் சமூக அமைப்புகளால் சரி பார்க்கப் பட்டதாகவும் இருக்க வேண்டும்.