சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA) சபையின் எட்டாவது அமர்வு புது டெல்லியில் நடைபெற்றது.
மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்திலும், சூரிய சக்தி உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், காற்றாலை மின்சார உற்பத்தில் நான்காவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 120 ஜிகாவாட்களை கடந்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் அளவிலான புதைபடிவ எரிபொருள் சாரா மின் உற்பத்தித் திறனை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
ISA முன்னெடுப்புகளில் உலகளாவிய சூரிய சக்தி மையம், வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளுக்கான தளம் மற்றும் ஆப்பிரிக்காவின் சூரிய சக்தி சிறு மின் கட்டமைப்புத் திட்டம் ஆகியவை அடங்கும்.