TNPSC Thervupettagam

வனவாசிகள் இடமாற்றக் கொள்கை

November 3 , 2025 9 days 87 0
  • பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இடமாற்றங்களுக்கான தரநிலைகள், காலக்கெடு மற்றும் பொறுப்புணர்வை அமைக்க ஒரு தேசிய கட்டமைப்பைச் செயல்படுத்த உள்ளது.
  • புலிகள் வளங்காப்பகங்களிலிருந்து வனவாசி சமூகங்களை இடமாற்றம் செய்வது தன்னார்வ அடிப்படையிலானதாகவும், விதிவிலக்கு அடிப்படையிலானதாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.
  • ஒரு தேசிய தரவு தளம் அனைத்து இடமாற்றங்கள், இழப்பீடு மற்றும் இடமாற்றத்திற்குப் பிந்தைய நிலையைப் பதிவு செய்து கண்காணிக்கும்.
  • வருடாந்திர சுயாதீனத் தணிக்கைகள் இந்த நடவடிக்கைகள் வன உரிமைகள் சட்டம், 2006 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 ஆகியவற்றுடன் இணங்கப் படுவதைச் சரிபார்க்கும்.
  • கிராமங்கள் தங்கள் தனிப்பட்ட வன உரிமைகள் அல்லது சமூக வன உரிமைகளைப் பயன்படுத்துவதோடு, காடுகளில் தொடர்ந்து வசிக்கலாம்.
  • இடமாற்றத்திற்கான ஒப்புதல் சுதந்திரமானதாகவும், தகவலறிந்ததாகவும், வட்டார மொழியில் வழங்கப்பட்டதாகவும், சுயாதீன உரிமையியல் சமூக அமைப்புகளால் சரி பார்க்கப் பட்டதாகவும் இருக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்