2020 முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் 3,041 SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மதுரையில் 514 வழக்குகளுடன் அம்மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
பதிவு செய்யப்பட்ட 3,041 வழக்குகளில் மொத்தம் 509 வழக்குகள் (சுமார் 16%) காவல் துறையினரால் 'விவர வழு' காரணமாக ரத்து செய்யப்பட்டன.
இந்த முறையில் ரத்து செய்யப்பட்ட வழக்குகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் புதுக்கோட்டையில் 124 ஆகவும், அதைத் தொடர்ந்து தேனியில் 97 வழக்குகளாகவும் இருந்தன.
மதுரையில் பதிவான 514 வழக்குகளில், 76 வழக்குகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ஊமச்சிகுளம் பகுதியில் மட்டும் பதிவு செய்யப்பட்டன.