TNPSC Thervupettagam

இந்தியாவின் தொழிற்சாலை மையம் - தமிழ்நாடு

August 31 , 2025 6 days 86 0
  • 2023–2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத் தொழில்துறை கணக்கெடுப்பின்படி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பை மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று வெளியிட்டது.
  • இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் மொத்தம் 1,95,89,131 பேர் பணி அமர்த்தப் பட்டுள்ளனர்.
  • இந்தியாவின் மொத்தத் தொழிற்சாலை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு 15.24% பங்களிப்பை வழங்குகிறது.
  • அதற்கு அடுத்தபடியாக 13.07% பங்குடன் குஜராத் மாநிலமும், அதனைத் தொடர்ந்து 12.95% பங்குடன் மகாராஷ்டிராவும் இடம் பிடித்துள்ளன.
  • மொத்தத் தொழில்துறை பணியாளர் வளத்தில் உத்தரப் பிரதேசம் 8.30% மற்றும் கர்நாடகா 6.29% பங்கினைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவில் உள்ள 2,60,061 தொழிற்சாலைகளில், தமிழ்நாடு 15.43% பங்குடன்  அதிக பட்சப் பங்களிப்பைக் கொண்டுள்ளது.
  • குஜராத் மொத்தத் தொழிற்சாலைகளில் 12.81% பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மகாராஷ்டிரா 10.20% பங்குடனும், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் 8.51% மற்றும் ஆந்திரப் பிரதேசம் 6.16% பங்குடனும் இடம் பெற்றுள்ளன.
  • நிலையான மூலதனத்தில் தமிழ்நாடு 8.09% பங்குடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • தேசிய அளவிலான பங்கில் 10.11% பங்குடன் உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • மொத்த மதிப்புக் கூட்டலில் 10.26% பங்களிப்புடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்