ஒரு புதிய ஆராய்ச்சியானது, தீவிர வெப்பம் என்பது உடலின் மூலக்கூறு நிலைகளில் வயதாகும் தன்மையினை எந்த வித அறிகுறியுமின்றி நன்கு விரைவுபடுத்தக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
அறிவியலாளர்கள் வெப்பத்தின் தாக்கத்தினைப் புகைபிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல் போன்ற முக்கிய ஆபத்து காரணிகளுடன் ஒப்பிட்டனர்.
இந்த ஆய்வு ஆனது டிஎன்ஏவில் ஏற்படும் சில மாற்றங்களை அளவிடும் கருவிகள் "எபிஜெனெடிக் கடிகாரங்கள் எனும் வயது அளவிடல் கருவிகளை" பயன்படுத்தியது.
இந்தக் கடிகாரங்கள் ஆனது டிஎன்ஏ மெத்திலேற்றத்தினை கண்காணிக்கின்றன.
இது சுற்றுச்சூழலால் பாதிக்கப் படுகின்ற, மரபணுக்களை இயக்கவோ அல்லது அணைக்கவோ கூடிய ஒரு செயல்முறையாகும்.
ஆண்டிற்கு 140க்கும் மேற்பட்ட வெப்பமான நாட்கள் (90°F அல்லது 32.3 செல்சியசுக்கு மேல்) உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களில் 14 மாதங்கள் வரை உயிரியல் ரீதியாக கூடுதல் வயதானதாக பதிவானது.
வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார வேறுபாடுகளைக் கருத்தில் கொண்ட பிறகும் இந்த வயது அதிகரிப்பு விளைவு நீடித்தது.
விலங்குகளில் வெப்பம் ஆனது டிஎன்ஏவில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகின்றன என்பத்டு இது மிகவும் தவறான தகவமைப்பு கொண்ட எபிஜெனெடிக் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம் ஆனது விரைவான உயிரியல் வயது அதிகரிப்பு மூலம் எவ்வாறு நீண்டகால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்தக் கவலைகளை இந்த கண்டுபிடிப்புகள் எழுப்புகின்றன.