வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகம் சார்ந்த பேச்சுவார்த்தையின் நூற்றாண்டு விழா
June 29 , 2025 3 days 25 0
ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையேயான சந்திப்பின் 100வது நிறைவு ஆண்டானது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தப் பேச்சு வார்த்தையானது 1925 ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்த புரத்தின் சிவகிரி மடத்தில் நடைபெற்றது.
வைக்கம் சத்தியாகிரகம், அகிம்சை, தீண்டாமையை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்களுக்கு உதவுதல் போன்றவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.
அந்தக் காலத்தின் சமூகச் சீர்திருத்தம் மற்றும் சமத்துவப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ததற்கு காரணமாக அமைந்தது என்பதால் அவர்களின் பேச்சுவார்த்தை நினைவு கூரப்படுகிறது.