வெவ்வேறு மாவட்டங்களின் வருடாந்திர ஏற்றுமதி தரக் குறியீட்டினைத் தயாரிக்க மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அயல்நாட்டு வர்த்தகப் பொது இயக்குனரகம் உதவும் என்று மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இக்குறியீடு ஒவ்வொரு மாவட்டத்தையும் அவற்றின் ஏற்றுமதியில் நிலவும் போட்டித் தன்மையைப் பொருத்து தரவரிசைப் படுத்தும்.
மாவட்ட ஏற்றுமதி செயல்திட்டம், மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யக் கூடிய சரக்கு மற்றும் சேவைகளை அடையாளம் காணுவதையும் உள்ளடக்கும்.