வர்த்தக முத்திரை பாதுகாப்பு - பூரி ஜெகநாதர் கோயில்
June 16 , 2026 89 days 223 0
ஸ்ரீ ஜெகநாதர் கோயில் நிர்வாகம் (SJTA) ஆனது நீலச்சக்கரம் சின்னம் மற்றும் பதிதபபனா மற்றும் ஆனந்த பஜாரா ஆகிய சொற்களுக்கு வர்த்தக முத்திரைப் பாதுகாப்பைப் பெற்றுள்ளது என்பதோடு இத்தகையப் பாதுகாப்பைப் பெறும் முதல் இந்திய வழிபாட்டுத் தலம் இதுவாகும்.
'பதிதபபனா' என்றால் வீழ்ந்தவர்களின் இரட்சகர் என்று பொருள், மேலும் 'ஆனந்த பஜாரா' என்பது கோயிலின் உள்ளே உள்ள புனிதமான மகாபிரசாத உணவருந்தும் பகுதியாகும்.
'நீலச்சக்ரா' என்பது கோயில் கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள புனிதமான எட்டு ஆரங்களைக் கொண்ட உலோக வட்டமாகும்.
'வெள்ளை பகோடா' என்றும் அழைக்கப்படும் பூரி ஜெகநாதர் கோயில், பொது ஆண்டு 12-ஆம் நூற்றாண்டில் அனந்தவர்மன் சோடகங்க தேவரால் கட்டப்பட்டது; இது கலிங்க பாணியிலான நகர கட்டிடக்கலையைப் பின்பற்றுகிறது.
இக்கோயில் நான்கு 'சார் தாம்' திருத்தலங்களில் ஒன்றாகும் மற்றும் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை திருவிழாவின் மையமாகவும் திகழ்கிறது.