நேபாளத்தில் 25 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மருத்துவமனையை இந்தியா கட்டியுள்ளது. இந்த மருத்துவமனை சந்திர நாராயண் யாதவ் நினைவு மகப்பேறு மருத்துவமனை என்று அழைக்கப் படும்.
இந்த மருத்துவமனையானது இந்திய அரசின் சிறு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (SDP - Small Development Projects Scheme) கட்டப்பட்டுள்ளது.
SDP ஆனது ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், வங்காள தேசம் மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கு இந்திய வளர்ச்சி உதவியின் ஒரு தூணாக உள்ளது.
இந்திய வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் வளர்ச்சி உதவியாகும்.