இந்திய நகரங்களில் உள்ள அபாயகரமான காற்று மாசுபாட்டு நிலையை எடுத்துக் காட்டுவதற்காக “2014-2019 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் காற்றின் தரம் மீதான அரசியல் தலைவர்களின் நிலை மற்றும் நடவடிக்கைகள்” என்ற தலைப்பு கொண்ட அறிக்கையை காலநிலை போக்குகளுக்கான சுற்றுச்சூழல் குழு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகையான வாரணாசியானது உலக சுகாதார நிறுவனத்தின் மிகவும் மாசுபட்டுள்ள 15 நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று கூறுகிறது.
இது வாரணாசியில் நிலைமை மோசமடைந்துள்ளது என்று கூறுகிறது. ஆனால் அரசு அதன் அழகுபடுத்தல் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவதாகக் கூறுகிறது.
வாரணாசி நகரத்தில் அதிக அளவிலான கட்டுப்பாடற்ற கட்டுமானத்தின் காரணமாக ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாரணாசியின் காற்றுத் தரக் குறியீடானது 2017 ஆம் ஆண்டில் 490 என்ற மிகவும் அபாயகரமான நிலையிலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 384 என்ற மிகவும் மோசமான நிலையிலும் இருந்தது.
Air Quality Index
Status
0 – 50
Good
51 – 100
Satisfactory
101 – 200
Moderate
201 – 300
Poor
301 – 400
Very Poor
401 – 500
Severe
லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய பாராளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் காற்று மாசுபாட்டுப் பிரச்சினை குறித்து எதுவும் கண்டு கொள்வதில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் முறையே லக்னோ மற்றும் கான்பூர் பாராளுமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களாவர்.