இந்தியத் தேர்தல் ஆணையமானது ஷரத்து 324-ன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தல் நிறைவுடையும் வரை மூன்று அரசியல் சார்ந்த திரைப் படங்களுக்குத் தடை விதித்துள்ளது.
அரசியலமைப்பின் ஷரத்து 324-ன் கீழ், தேர்தலை நடத்துவது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகிய அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு சமநிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் பணியாகும்.
2013 ஆம் ஆண்டில் சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றமானது நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலானது இந்திய அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பின்” ஒரு பகுதி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.