சுகாதார நல ஆலோசனை வழங்கக் கூடிய பகுதிகளில் பணியாற்றும் ஒரு அமைப்பான ஜர்மா வெல்னஸ் அமைப்பானது பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைக் கொண்ட பள்ளி செல்லும் 2 இலட்சம் குழந்தைகளிடையே ஒரு சுகாதார ஆய்வை நடத்தியது.
இது “பள்ளிகளின் திறன் மற்றும் தாக்கங்களை மேம்படுத்துதல்: பள்ளி சுகாதார முதல் கட்ட சோதனைத் திட்டத்திலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவு” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முடிவுகள்
உடல் பருமன், பார்வைக் குறைபாடு மற்றும் பல் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை இந்தியா முழுவதும் 2 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகும்.
30.4 சதவிகித மாணவர்கள் இயல்பற்ற பிஎம்ஐ (உடல் பொருண்மை எண்) கொண்டவர்களாக உள்ளனர். இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு மூக்குக் கண்ணாடி தேவைப்படுகின்றது.