வாகனங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்குச் சட்டத்தைக் கொண்டு சென்று சேர்த்தல் குறித்தப் பிரச்சாரம்
November 11 , 2021 1501 days 542 0
நீதித் துறை அமைச்சகமானது வாகனங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்குச் சட்டங்களைக் கொண்டு சென்று சேர்ப்பதற்காக வேண்டி ஒரு வார கால அளவிலான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது.
இந்தப் பிரச்சாரமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 08 முதல் நவம்பர் 14 வரை நடத்தப் பெறும்.
இந்தப் பிரச்சாரத்தின் கீழ், மக்கள் தங்களது உரிமைகளை கோரச் செய்வதற்கும், அவர்களின் சிரமங்களைச் சரியான நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கும் வழக்கிற்கு முந்தைய ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கச் செய்வதற்குமாக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஒரு வாரமானது தேவையுள்ள மக்களுக்கு “டிஜிட்டல் சட்ட அதிகாரமளிப்பின் மூலம் அனைவருக்கும் நீதி வழங்கலை” உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப் பட்டது.