TNPSC Thervupettagam
August 29 , 2025 24 days 78 0
  • ஸ்ரீஹரிகோட்டில் முதல் ஒருங்கிணைந்த வான்வழி தரையிறக்கச் சோதனையை (IADT-01) இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இது ககன்யான் மனித விண்வெளிப் பயணப் பணியில் ஒரு முக்கியப் படி நிலையைக் குறிக்கிறது.
  • இந்தச் சோதனை 4.8 டன் எடையுள்ள போலி குழுத் தொகுதியை 3 கிமீ உயரத்தில் இருந்து கீழிறக்குவதன் மூலம் பாராசூட் அடிப்படையிலான வேகக் குறைப்பு அமைப்பைச் செயல்பாட்டினை விளக்கிக் காட்டியது.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) ஆனது மனித விண்வெளி விமான மையம், சதீஷ் தவான் விண்வெளி மையம் மற்றும் இந்திய விமானப் படையுடன் ஒருங்கிணைந்து சுமார் 90% செயல்பாடுகளை மேற்கொண்டது.
  • விரிவான மாதிரியாக்கம் மற்றும் கருவிகளின் உதவியுடன் IADT-01 எதிர்பார்த்தத் தரையிறக்கத்தை அடைந்தது என்பதோடு இது பாராசூட் (வான் குடை மிதவை) பயன்பாடு மற்றும் தரையிறங்கும் நிலைமைகள் குறித்த முக்கியமானத் தரவுகளை வழங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்