வாயேஜர் 1 விண்கலமானது, நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் "நெருப்புக் கவசம்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் நுழைந்துள்ளது.
"நெருப்புக் கவசம்" என்பது சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புப் பகுதிக்கு (ஹீலியோபாஸ்) அருகில் அமைந்துள்ள அதி வெப்பமான பிளாஸ்மாவின் மெல்லியப் படலம் ஆகும்.
இந்த மண்டலத்தில் வெப்பநிலை 30,000 முதல் 50,000 கெல்வின் (தோராயமாக 90,000°F) வரை இருக்கும்.