TNPSC Thervupettagam

குவாடா நெகட்டிவ் இரத்தக் குழு

June 26 , 2025 7 days 53 0
  • பிரான்சு நாடானது முற்றிலும் புதிய இரத்தக் குழு அமைப்பை அடையாளம் கண்டு உள்ளது.
  • இது தற்போது சர்வதேச இரத்தப் பரிமாற்றச் சங்கத்தால் (ISBT) மிக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • EMM-எதிர்மறை என்று பெயரிடப்பட்ட இந்த குழு, பேச்சுவழக்கில் "குவாடா நெகட்டிவ்" என்று அழைக்கப்படுகிறது.
  • புதிதாக வகைப்படுத்தப்பட்ட இந்த இரத்தக் குழு அமைப்பானது, ISBT சங்கத்தினால் அதிகாரப்பூர்வமாக ISBT042 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது EMM ஆன்டிஜென் இல்லாத வகையாக வரையறுக்கப்படுகிறது.
  • EMM ஆன்டிஜென் ஆனது பொதுவாக சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படுகிறது மற்றும் இது மிகவும் அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஆன்டிஜென் என்று கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்