ஸ்கல்ப்டர் அண்டத்தின் மிக விரிவான வரைபடம்
- ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தில் (ESO) உள்ள வானியலாளர்கள் இந்த அண்டத்தின் விரிவான வரைபடத்தை உருவாக்கினர்.
- இது 65,000 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை பரவியுள்ளது.
- ஸ்கல்ப்டர் அண்டமானது NGC 253 என்றும் அழைக்கப்படுகிறது.
- இது பூமியிலிருந்து புலப்படும் வகையிலான பிரகாசமான மற்றும் தூசி நிறைந்த சுழல் அண்டங்களில் ஒன்றாகும்.
- இது ஸ்கல்ப்டர் விண்மீன் திரளில் சுமார் 11 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
- இது வெள்ளி நாணயம் அல்லது வெள்ளி டாலர் அண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த NGC 253 என்பது தற்போது தீவிர நட்சத்திர உருவாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர வெடிப்பு அண்டமாகும்.
- இப்புதிய தரவுகள் ஸ்கல்ப்டர் அண்டத்திற்குள் முன்னர் அறியப்படாத சுமார் 500 கிரக விண் முகிற் படலங்களை (நெபுலா) கண்டறிய வழிவகுத்தன.
- ஸ்கல்ப்டர் அண்டமானது நமது சொந்தப் பால் வெளி அண்டத்துடன் பல கட்டமைப்பு மற்றும் அளவு சார் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

Post Views:
36