TNPSC Thervupettagam

விண்வெளிச் சுற்றுப் பாதையில் ஆயுதங்கள் - அமெரிக்கா

September 17 , 2026 3 days 66 0
  • அமெரிக்க விண்வெளிப் படையானது சுற்றுப்பாதையில் ஆயுதங்களை நிலை நிறுத்தி உள்ளதாக முதல் முறையாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
  • அமெரிக்க விமானப்படை செயலாளர் இந்த ஆயுதங்களை “சுற்றுப்பாதை விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்கள்” (on-orbit space control weapons) என்று கூறினார், ஆனால் அவற்றின் வகை அல்லது நிலைநிறுத்தப்பட்ட தேதியை குறிப்பிடவில்லை.
  • இந்த ஆயுதங்கள் அமெரிக்கப் படைகள் மற்றும் விண்வெளி அமைப்புகளை விரோத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை.
  • இதன் திறன்களில் ஜாமிங் அல்லது பிற வகையான குறுக்கீடுகளுக்கான அமைப்புகள் அடங்கும், ஆனால் சரியான தொழில்நுட்பம் வெளியிடப்படவில்லை.
  • அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் விண்வெளி எதிர்ப்புத் திறன்களைத் தொடர்ந்து உருவாக்கி சோதித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்