TNPSC Thervupettagam

விண்வெளித் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையம் - கர்நாடகா

May 8 , 2026 15 hrs 0 min 48 0
  • இந்தியாவின் முதல் மாநிலத் தலைமையிலான விண்வெளித் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை கர்நாடகா, பெங்களூருவில் தொடங்கியது.
  • கர்நாடகா புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப சங்கம், SIA-இந்தியாவுடன் (செயற்கைக் கோள் தொடர்புத் துறை சங்கம் - இந்தியா) இணைந்து இந்த மையத்தை அமைத்து உள்ளது.
  • விண்வெளித் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்துறை சார்ந்த பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புத்தொழில் காப்பகங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைசார் பயன்பாடுகளை இது ஆதரிக்கும்.
  • ஆராய்ச்சியை வணிக ரீதியான விளைவுகளாகவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கமாகவும் மாற்றுவதில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.
  • விண்வெளித் துறையில் ஆராய்ச்சி மற்றும் சந்தைக்குத் தயாரான தீர்வுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்