TNPSC Thervupettagam

வியாழன் கோளின் அளவு திருத்தம்

February 27 , 2026 8 days 110 0
  • ஜூனோ விண்கலத்தின் தரவைப் பயன்படுத்தி நாசா வியாழனின் அளவைத் திருத்தி உள்ளது.
  • வியாழனின் மத்திய ரேகை விட்டம் 88,841 மைல்கள் (142,976 கிலோமீட்டர்கள்) ஆகும் என்பதோடு இது முந்தைய மதிப்பீடுகளை விட சுமார் 5 மைல்கள் குறைவு ஆகும்.
  • இதன் துருவ விட்டம் 83,067 மைல்கள் (133,684 கிலோமீட்டர்கள்) ஆகும் என்பதோடு இது முந்தையத் தரவுகளை விட சுமார் 15 மைல்கள் குறைவு ஆகும்.
  • அதன் விரைவான சுழற்சி காரணமாக வியாழன் துருவங்களை விட மத்திய ரேகையில் சுமார் 7% அகலமாக இருப்பதாக கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
  • 2016 முதல் வியாழனைச் சுற்றி வரும் ஜூனோ அதன் அமைப்பு குறித்த துல்லியமான தரவை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்