TNPSC Thervupettagam
February 28 , 2026 7 days 57 0
  • உயிரி தொழில்நுட்பத் துறையின் BioE3 கொள்கையின் கீழ், உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் மற்றும் நொதிகள் முன்னுரிமைப் பகுதியாக அடையாளம் காணப் பட்டுள்ளன.
  • உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் என்பது கரும்பு, சோளம், ஸ்டார்ச் மற்றும் உயிரி எச்சங்கள் போன்ற உயிரியல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தொழில்துறை இரசாயனங்கள் ஆகும்.
  • தூய்மையாக்கம், உணவு பதப்படுத்துதல், மருந்துகள், ஜவுளி மற்றும் காகிதம் போன்ற தொழில்களில் பயன்படுத்தப்படும் உயிரியல் வினையூக்கிகளாக நொதிகள் உள்ளன.
  • BioE3 கொள்கை (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில் நுட்பம்) இந்தியாவில் உயர் செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 479.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அசிட்டிக் அமிலத்தை இறக்குமதி செய்தது என்பதோடு இது இறக்குமதியினைச் சார்ந்திருப்பதைக் குறிக்கிறது.
  • இந்தக் கொள்கை பெட்ரோ கெமிக்கல்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து நீடித்த தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்