TNPSC Thervupettagam

குறை அதிர்வெண் சூரியக் கண்காணிப்பு

March 1 , 2026 6 days 63 0
  • இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், கௌரிபிதனூர் ரேடியோ தொலை நோக்கி மற்றும் ஆதித்யா-L1 இல் உள்ள புலப்படும் உமிழ்வுக் கோட்டு ஒளி வட்ட வரைவி (VELC) ஆகியவற்றைப் பயன்படுத்தி, சூரிய வெப்ப உமிழ்வால் (CME) இயக்கப் படும் அதிர்வுகளைக் கண்காணித்தனர்.
  • புலப்படும் உமிழ்வுக் கோட்டு ஒளிவட்டவரைவி (VELC) என்பது சூரியனின் கொரோனாவை புலப்படும் அலை நீளங்களில் ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி ஆகும்.
  • கௌரிபிதனூர் ரேடியோ தொலைநோக்கி சுமார் 150 மெகா ஹெர்ட்ஸுக்குக் கீழே இயங்குகிறது மற்றும் குறைந்த அதிர்வெண் கொண்ட சூரிய ரேடியோ அலை உமிழ்வைக் கண்காணிக்கிறது.
  • மே 27, 2024 அன்று CME-யால் இயக்கப்படும் அதிர்வு சூரியனில் இருந்து சுமார் 130,000 கி.மீ தொலைவில் தொடங்கியதாக குழு மதிப்பிட்டுள்ளது.
  • இந்த அதிர்வு சூரியனுக்கு அருகில் வினாடிக்கு கிட்டத்தட்ட 1,700 கி.மீ வேகத்தில் பயணித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்