February 27 , 2026
8 days
109
- ஜூனோ விண்கலத்தின் தரவைப் பயன்படுத்தி நாசா வியாழனின் அளவைத் திருத்தி உள்ளது.
- வியாழனின் மத்திய ரேகை விட்டம் 88,841 மைல்கள் (142,976 கிலோமீட்டர்கள்) ஆகும் என்பதோடு இது முந்தைய மதிப்பீடுகளை விட சுமார் 5 மைல்கள் குறைவு ஆகும்.
- இதன் துருவ விட்டம் 83,067 மைல்கள் (133,684 கிலோமீட்டர்கள்) ஆகும் என்பதோடு இது முந்தையத் தரவுகளை விட சுமார் 15 மைல்கள் குறைவு ஆகும்.
- அதன் விரைவான சுழற்சி காரணமாக வியாழன் துருவங்களை விட மத்திய ரேகையில் சுமார் 7% அகலமாக இருப்பதாக கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
- 2016 முதல் வியாழனைச் சுற்றி வரும் ஜூனோ அதன் அமைப்பு குறித்த துல்லியமான தரவை வழங்குகிறது.

Post Views:
109