ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி விலங்கியல் பூங்காவானது தனது விலங்கு இடமாற்றத் திட்டத்தின் கீழ் புது டெல்லியிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவிடமிருந்து 3 புதிய விலங்குகளைப் பெற்றுள்ளது.
இமாலய வெண்கழுத்து மலைக் காட்டாடு, வங்காள நரி மற்றும் ஒரு இணை நில்கை மான் (இந்திய மான்) ஆகியவை புதிதாக இங்கு கொண்டு வரப்பட்ட சில புதிய விலங்கினங்களாகும்.
இந்தத் திட்டமானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த இடமாற்றமானது 2 கட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இந்திரா காந்தி விலங்கியல் பூங்காவானது புது டெல்லியின் தேசிய விலங்கியல் பூங்காவிடமிருந்து மேலும் ஒரு நீர்யானையைப் பெற உள்ளது.