இது பாதகமான கூடுதல் கட்டணங்களை விரைவாக விசாரிப்பதற்கும் தள்ளுபடி செய்வதற்கும் ஆன ஒரு தன்னார்வ முன்னெடுப்பு அல்லது விஸ்வாஸ் ஆகும்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விஸ்வாஸ் 2026 திட்டத்தை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தது.
இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) தொடங்கப்பட்ட ஒரு முறை தீர்வு காணும் திட்டமாகும்.
இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வகைச் சட்டங்கள், 1952 அல்லது சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-இன் கீழ் விதிக்கப்பட்ட சேதங்கள் / தண்டனைகள் தொடர்பான தகராறுகளுக்கு மட்டுமே கண்டிப்பாகப் பொருந்தும்.
இது தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதையும், நீடித்த வழக்குகளைக் கட்டுப் படுத்துவதையும், அபராதங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முதலாளி தகராறுகளுக்கு விரைவான டிஜிட்டல் தீர்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.