இந்தியாவின் மிகப்பெரிய கிராம அளவிலான தொலைத்தொடர்பு வலையமைப்பு செயல்திறன் கணக்கெடுப்பு
July 27 , 2026 15 hrs 0 min 35 0
இந்த அகில இந்தியக் கணக்கெடுப்பானது, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை மற்றும் டிராய் (TRAI) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
5.68 லட்சம் கிராமங்களில் இந்தியாவின் மிகப்பெரிய கிராம அளவிலான தொலைத் தொடர்பு வலையமைப்பு செயல்திறன் கணக்கெடுப்பை நடத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் ஊழியர்கள் (கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள்), வழக்கமான விநியோகங்களின் போது, டிராய் உருவாக்கிய ஆண்ட்ராய்டு செயலியைப் பயன்படுத்தி ஏர்டெல், ஜியோ, VI மற்றும் BSNL ஆகியவற்றின் பரவலை மதிப்பிடுவார்கள்.
"பரவல் இல்லாத பகுதிகளை" அடையாளம் காணவும், எதிர்கால தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு வழிகாட்டவும், நுணுக்கமான கள அளவிலான தரவுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.