TNPSC Thervupettagam

வெப்பம் தொடர்பான செயல் திட்டம் 2026

June 13 , 2026 15 hrs 0 min 138 0
  • மாநிலம் முழுவதும் வெப்ப அலைக்கான தயார்நிலையை வலுப்படுத்தவும் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் 'மாநில வெப்ப செயல் திட்டம் (HAP) 2026'-ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
  • பல துறை ஒத்துழைப்புடன் வெப்ப அபாயத்தைக் கணித்தல், தயார்நிலை மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை இத்திட்டம் வழங்குகிறது.
  • மனிதர்கள் உணரும் வெப்ப அழுத்தத்தை மதிப்பிடுவதற்கு காற்றின் வெப்பநிலை மற்றும் ஒப்பு ஈரப்பதம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஸ்டெட்மேன் வெப்பக் குறியீட்டைப் பயன்படுத்துகிறது.
  • கிராம ஊராட்சி மற்றும் நகர்ப்புற வார்டு மட்டங்களில் அபாயம், பாதிப்பு, பாதிப்புக்கு உள்ளாகும் தன்மை மற்றும் வெப்ப அபாய மதிப்பீடுகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன.
  • இதனைத் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாயத் தணிப்பு முகமை (TNDRRA) ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
  • வெப்ப அலை மேலாண்மை, மருத்துவமனை தயார்நிலை மற்றும் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்கு விரைவான பதிலடி ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை இத்திட்டம் பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்