வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா, 2019
February 19 , 2019 2359 days 746 0
வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா 2019ஐ அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது இந்தியக் குடிமக்களில் பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியப் பெண்களின் கணவர்களால் அவர்களது மனைவிகள் ஏமாற்றப்படுவதற்கு எதிராக அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் அதிக பொறுப்புடைமையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய மசோதாவின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கிடையே நிகழும் திருமணத்தை இந்தியாவிலோ அல்லது இந்தியத் தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய அலுவலகங்களிலோ திருமணம் நடந்து 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இந்தத் திருமணத்தை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லையெனில் வெளிநாடு வாழ் இந்தியரின் கடவுச் சீட்டு இரத்து செய்யப்படும். மேலும் அவர்களுக்கு அழைப்பாணை மற்றும் பிடியாணை உத்தரவு வழங்கப்படும்.
இந்த மசோதா பின்வரும் சட்டங்களில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
கடவுச் சீட்டுகள் சட்டம், 1967 மற்றும்.
பிரிவு 86 A-ஐ இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973.