வேளாண் ஏற்றுமதிக் கொள்கையைச் செயல்படுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
March 5 , 2020 1994 days 599 0
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (APEDA - Agricultural and Processed Food Export Development Authority APEDA) வேளாண் ஏற்றுமதிக் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக பல அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
வேளாண் ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, பொருள்களுக்கான சிறந்த விலையை விவசாயிகளுக்கு வழங்குதல் மற்றும் இந்திய அரசின் கொள்கைகள் & திட்டங்களுக்குள் ஒத்திசைந்து போதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவசாய ஏற்றுமதிக் கொள்கையானது வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது மதிப்புத் தொடர் முழுவதும் இழப்புகளைக் குறைப்பதற்கு உதவுவதற்காக மூலாதாரத்திலேயே மதிப்பைக் கூட்டுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வருமானத்திற்கான “விவசாயிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையின்” மீது கவனம் செலுத்துகின்றது.