வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) BHARATI முன்னெடுப்பினைத் தொடங்கியது.
BHARATI என்பது இந்தியாவின் வேளாண் தொழில்நுட்பம், மீள்தன்மை, முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி செயல்படுத்தலுக்கான காப்பு மையத்தைக் குறிக்கிறது.
இந்தத் திட்டம் வேளாண் உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கிறது என்பதோடு மேலும் அவை உலகளாவிய சந்தைகளை அடைய உதவுகிறது.
சர்வதேச அளவில் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த சிறந்த 10 புத்தொழில் நிறுவனங்களை APEDA தேர்ந்தெடுக்கும்.
APEDA ஆணையத்தின் வேளாண் ஏற்றுமதி ஆனது 2025–26 ஆம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் மாத காலக் கட்டத்தில் சுமார் 7% அதிகரித்து, 18.6 பில்லியன் டாலரை எட்டியது.
2025–26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வேளாண் ஏற்றுமதி 30 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களைக் கொண்ட உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் கண்காட்சியான Indusfood 2026 என்ற நிகழ்வில் இந்த முன்னெடுப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.
APEDA வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.