ஸ்டார்ட் அப் இந்தியா விதை நிதிவழங்கல் திட்டம் (SISFS)
March 26 , 2021 1571 days 888 0
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 அன்று வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
இத்திட்டம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் அமல்படுத்தப்படும்.
இத்திட்டம் இந்தியா முழுவதும் 3600 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இத்திட்டம் கருத்தாக்கத்திற்கான ஆதாரம், முன்மாதிரி உருவாக்கம், உற்பத்திப் பொருள் சோதனை, சந்தை நுழைவு மற்றும் வணிகமயமாக்கல் போன்றவற்றிற்கு என்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.