ஸ்டார்ட் அப் மிளிரல் என்ற நிறுவனமானது ஆனது ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை, அவற்றின் தரம் மற்றும் வர்த்தகச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும் சூழலைமைப்பை அளவிடுகின்றது.
இந்தக் குறியீட்டின் படி, இந்தியா 2019 ஆம் ஆண்டிலிருந்த 17வது இடத்திலிருந்து 6 இடங்கள் சரிவடைந்து 23வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தத் தரவரிசையில் அமெரிக்கா முதல் இடத்திலும் ஐக்கிய இராஜ்ஜியம் 2வது இடத்திலும் இஸ்ரேல் 3வது இடத்திலும் உள்ளன.
முதல் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 4 இந்திய நகரங்கள் மட்டுமே “ஸ்டார்ட் அப் சூழலமைப்பிற்கான உலகளாவியத் தரவரிசையில் 2020 ஆண்டின் நகரங்கள்” பெயரிடப் பட்டுள்ளன.
பெங்களுரூ, புதுதில்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகியவை இந்த 4 நகரங்களாகும்.