TNPSC Thervupettagam

ஸ்பார்டேயஸ் மற்றும் சோனோய்டா

June 20 , 2025 14 days 51 0
  • தென்னிந்தியாவில் ஸ்பார்டேய்னே துணைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய வகை குதிக்கும் சிலந்திகளை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அவை அவற்றினுடைய திறம் மிக்க வேட்டைத் திறன்கள் மற்றும் வலையமைத்துத் தாக்கும் உத்திகளுக்குப் பெயர் பெற்றவையாகும்.
  • இந்தக் கண்டுபிடிப்பானது, முன்னதாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்ட இந்தப் பேரினங்கள் இந்தியாவில் மிக முதல் முறையாக கண்டறிப்பட்டதைக் குறிக்கின்றன.
  • சால்டிசிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிலந்திகள், அவற்றின் கூர்மையான பார்வை மற்றும் பெரும்பாலும் இரையை ஒத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மற்ற சிலந்திகளை திசை திருப்புகின்ற தனித்துவமான வேட்டை முறைகளுக்கு பெயர் பெற்றவையாகும்.
  • கூடுதலாக, ஆப்பிரிக்காவில் மட்டுமே இருப்பதாக முன்னர் கருதப்பட்ட இந்த Sonoita cf. lightfooti என்ற இனமும் கர்நாடகாவில் கண்டறியப்பட்டது.
  • தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் சில பிரதிகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • இந்த ஆய்வு நீண்டகாலமாக நிலவி வந்த வகைபிரித்தல் குழப்பத்தையும் தீர்த்துள்ளது.
  • மேற்கு வங்காளத்தின் கங்காசாகரில் மார்பிஸ்ஸா கங்காசாகரென்சிஸ் இனம் 2005 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது.
  • இந்த இனமானது, ஒரு வரலாற்று ரீதியான அருங்காட்சியக மாதிரியை கவனமாக பரிசோதித்ததைத் தொடர்ந்து, 1900 ஆம் ஆண்டில் முதன்முதலில் விவரிக்கப்பட்ட ஓர் இனமான ஃபேசியஸ் ஃபிம்பிரியாட்டஸைப் போலவே உள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டது.
  • இந்தக் கண்டுபிடிப்புகளுடன், இந்தியாவில் ஸ்பார்ட்டீனே துணைக் குடும்பத்தின் கீழான சிலந்தி இனங்களின் 10 பேரினங்களில் 15 இனங்களாக அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்