ஸ்வச் சர்வேக்சன் 2022 விருதுகள்
October 6 , 2022
1035 days
462
- இந்தூர் நகரம் தொடர்ந்து ஆறாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
- சூரத் மற்றும் நவி மும்பை ஆகிய நகரங்கள் அடுத்த இரண்டு இடங்களைப் பெற்றன.
- இதில் சிறப்பாகச் செயலாற்றிய மாநிலங்களின் பிரிவில், மத்தியப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
- 100க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் பிரிவில், திரிபுரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், மகாராஷ்டிர மாநிலத்தின் பஞ்ச்கனி நகரமானது முதலிடத்தைப் பிடித்தது.
- அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கரின் படான் (NP) மற்றும் மகாராஷ்டிராவின் கர்ஹாட் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், ஹரித்வார் தூய்மையான கங்கை நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- அதைத் தொடர்ந்து வாரணாசி மற்றும் ரிஷிகேஷ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கங்கை நகரங்களில் பிஜ்னோர் முதல் இடத்தைப் பிடித்தது.
- அதைத் தொடர்ந்து முறையே கன்னோஜ் மற்றும் கர்முக்தேஷ்வர் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- மகாராஷ்டிராவின் தியோலாலி நகரானது நாட்டின் தூய்மையான இராணுவக் குடியிருப்பு வாரியமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Post Views:
462