13 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 231 இடங்களில் கடலோர தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஸ்வச் சாகர் சுரக்ஷித் சாகர் திட்டத்தின் ஐந்தாவது பதிப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் பிரச்சாரத்தின் போது சுமார் 15 லட்சம் பேர் பெருங்கடல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றனர்.
இது நாடு தழுவிய தூய்மைப் பணிகள் மூலம் கடலோரத் தூய்மை மற்றும் கடல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
புதுடெல்லியில் நடைபெற்ற அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் இந்த பிரச்சாரம் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை - தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தை (CSIR-NIScPR) முகமை நிறுவனமாகக் கொண்டு உத்தேசிக்கப்பட்டுள்ள அறிவியல் சாதனைகளுக்கான டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்பட்டு வருகிறது.