15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கான ஸ்வதேஷ் தர்ஷன் 2 என்ற திட்டத்தினை மத்திய அரசு தொடங்க உள்ளது.
மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடங்கிய பதினைந்து மாநிலங்கள் இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
‘ஸ்வதேஷ் தர்ஷன் 2’ திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப் படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மற்றும் பிரயாக்ராஜ், மத்தியப் பிரதேசத்தில் குவாலியர், சித்ரகூட் மற்றும் கஜுராஹோ மற்றும் மகாராஷ்டிராவில் அஜந்தா மற்றும் எல்லோரா ஆகியவை இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களாகும்.
இது கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலா மண்டலங்களில் இருந்து விலகி, இடம் சார்ந்தச் சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்ற இந்தியாவின் புதிய உள்நாட்டுச் சுற்றுலாக் கொள்கையின் ஒரு பகுதியாக இது ஊக்குவிக்கப்படுகிறது.
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டமானது கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலா மண்டலங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக 2014-15 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் தொடங்கப்பட்டது.
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்திற்கு மத்திய அரசு முழு நிதியுதவியை வழங்குகிறது.