TNPSC Thervupettagam

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி

October 30 , 2022 1002 days 533 0
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் தடுப்பூசியின் உற்பத்தியானது, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்பட உள்ளது.
  • இதற்கு நாற்கர இணைப்புத் திறன் கொண்ட மனித பாப்பிலோமா (HPV)- "செர்வாவாக்" தடுப்பூசி என பெயரிடப்பட்டு, இது இந்திய சீரம் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக இந்த தடுப்பூசி அறிவிக்கப்பட்டது.
  • 'செர்வாவாக்' என்பது, இந்திய சீரம் நிறுவனத்தின் ஆதரவுடன், பில் அண்ட் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடனான DBT மற்றும் BIRAC ஆகியவற்றின் கூட்டுழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்டது.
  • 'கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா' என்ற அதன் கூட்டணி திட்டத்தின் மூலம் இந்த நாற்கர இணைப்புத் திறன் கொண்ட தடுப்பூசியானது உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்