தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) நாட்டின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறித்த செய்திக் குறிப்பை வெளியிட்டது.
பல்வேறு பரிமாணங்களில் பதிவான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதிக்கு இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்(EPFO), தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றின் படி இந்தியாவில் முறை சார் வேலைவாய்ப்பு ஆகஸ்ட் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது.
ஜூலை மாதத்தில் 1.82 மில்லியனாக இருந்த, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது, 7.1 சதவீதம் குறைந்து ஆகஸ்ட் மாதத்தில் 1.69 மில்லியனாக குறைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 1.58 மில்லியன் சந்தாதாரர்களுடன் ஒப்பிடச் செய்கையில், ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் குறைந்து 1.46 மில்லியன் சந்தா தாரர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.