ஹுருன் இந்தியா அமைப்பின் செல்வந்தர்கள் பட்டியல் 2025
October 4 , 2025 19 days 56 0
பில்லியனர்களில், 9.55 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் அம்பானி முன்னிலை வகிக்கிறார் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 8.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் கௌதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஷாருக்கான் (59) 12,490 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவினை மையமாகக் கொண்ட பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனத்தின் நிறுவனரான சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31), 21,190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதல் முறையாக இப்பட்டியலில் இணைந்துள்ளார்.
இதன் மூலம் இவர் இப்பட்டியலில் இணைந்த இளம் பில்லியனர் (செல்வந்தர்) என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
HCL குழுமத்தைச் சேர்ந்த ரோஷ்னி நாடார் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற இளம் நபராவார்.
2025 ஆம் ஆண்டு செல்வந்தர்கள்/பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு 167 லட்சம் கோடி ரூபாய் ஆகும் என்பதோடு இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியளவாகும்.
மும்பை நகரானது 451 சேர்க்கைகளுடன் செல்வந்தர்களின் தலைநகராகத் தொடர்ந்து திகழ்கிறது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பெங்களூரு (116), ஐதராபாத் (102), சென்னை (94) மற்றும் புனே (66) ஆகியவை உள்ளன.