TNPSC Thervupettagam

RSS அமைப்பின் 100 ஆம் ஆண்டு நிறைவு

October 4 , 2025 19 days 51 0
  • இராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) நூற்றாண்டு விழாவில் பிரதமர் 100 ரூபாய் நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
  • 100 ரூபாய் நாணயத்தில் ஒரு புறம் வரத முத்திரை கொண்ட பாரதத் தாய், ஒரு சிங்கம், மற்றும் சுயம்சேவகர்கள் அதற்கு மரியாதை செலுத்தும் வகையிலான உருவமும், மற்றொரு புறத்தில் தேசியச் சின்னமும் இடம்பெற்றுள்ளது.
  • இந்த நாணயத்தில், சங்கத்தின் வழிகாட்டும் முழக்கமான "இராஷ்ட்ராய ஸ்வாஹா, இடாம் இராஷ்ட்ராய, இடாம் ந மமா" என்பது இடம் பெற்றிருந்தது.
  • சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய நாணயத்தில் பாரதத் தாயின் உருவம் சித்தரிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • RSS அமைப்பானது, 1925 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளில் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவரால் நாக்பூரில் நிறுவப்பட்டது.
  • சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்தல் போன்ற தற்போதையச் சவால்களை எதிர்கொள்வதே RSS அமைப்பின் பஞ்ச பரிவர்த்தன் (ஐந்து மாற்றங்கள்) கட்டமைப்பின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்