இந்தியா முழுவதும் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய 'வந்தே மாதரம்' பாடலுக்கு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று அரசியலமைப்புச் சபையானது தேசியப் பாடலின் அந்தஸ்தை வழங்கியது.
இது 1875 ஆம் ஆண்டில் பங்கிம்சந்திர சட்டர்ஜி அவர்களால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது.
ஆனால், இப்பாடல் முதலில் 1882 ஆம் ஆண்டில் சட்டர்ஜியின் வங்காள மொழிப் புதினமான ஆனந்த மடம் நூலில் வெளியிடப் பட்டது.