TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீடு 2026

May 18 , 2026 14 days 99 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி & பார்ட்னர்ஸ் கடவுச்சீட்டுக் குறியீடானது உலகளவில் இந்தியாவின் கடவுச்சீட்டினை 78-வது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது.
  • சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவைப் பயன்படுத்தி, 199 உலகளாவிய இடங்களுக்கு இசைவுச் சீட்டு இல்லாத அல்லது வருகைக்கான இசைவுச் சீட்டு அணுகலின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்துள்ளது.
  • இந்தியாவின் கடவுச்சீட்டானது இசைவுச் சீட்டு இல்லாத, வருகைக்கான இசைவுச் சீட்டு அல்லது மின்னணு-இசைவுச் சீட்டு வசதிகள் மூலம் 56 இடங்களுக்கான அணுகலை வழங்குகிறது.
  • இந்தியாவின் தரவரிசை முந்தைய 2026 ஆம் ஆண்டு புதுப்பிப்பில் 75-வது இடத்திலிருந்து தற்போது 78-வது இடத்திற்குச் சரிந்துள்ளது; இருப்பினும் இது 2025 ஆம் ஆண்டு (85-வது இடம்) மற்றும் 2021 ஆம் ஆண்டு (90-வது இடம்) ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது முன்னேறியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் (1-வது இடம்), ஜப்பான் (2-வது இடம்) மற்றும் தென்கொரியா (3-வது இடம்) ஆகியன முதலிடத்தில் உள்ள கடவுச்சீட்டுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்