உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் - கான்பூர் பகுதிக்கு அடியில் ஒரு பிரம்மாண்டமான பழங்கால நிலத்தடி நதிப் பாதையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பழங்கால நதிப்பாதை மேற்பரப்பிற்கு கீழே 10-15 மீட்டர் ஆழத்தில் அமைந்து உள்ளதுடன் கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது.
வான்வழி மின்காந்த (AEM) ஆய்வுகள் மற்றும் ஆழமான துளையிடுதல் மூலம் இப்பகுதியில் பழங்கால நதிப்படுகை மணல் படிவுகள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
பழங்கால நதிப்பாதைகள் என்பவை தற்போது செயல்பாட்டில் இல்லாத பழைய நதிப் பாதைகள் ஆகும் என்பதோடு இவை நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் தாதுப் பொருள் ஆய்வுகளுக்கு முக்கியமானவை ஆகும்.