தனது மாநிலத்தில் பெண்களை மையமாகக் கொண்ட நலத்திட்டங்களை வலுப் படுத்துவதற்காக, மேற்கு வங்க அரசு 2026 ஆம் ஆண்டு மே 14 அன்று அன்னபூர்ணா பண்டார் திட்டத்தைத் தொடங்கியது.
இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் மேற்கு வங்கம் முழுவதும் செயல்படுத்தப் படும்.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய பெண் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடி பயன் பரிமாற்றம் (DBT) மூலம் மாதம் ₹3,000 வழங்கப் படும்.
சமூக நல ஆதரவின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் வசதியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதும், மாநிலத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.