2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி & பார்ட்னர்ஸ் கடவுச்சீட்டுக் குறியீடானது உலகளவில் இந்தியாவின் கடவுச்சீட்டினை 78-வது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது.
சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவைப் பயன்படுத்தி, 199 உலகளாவிய இடங்களுக்கு இசைவுச் சீட்டு இல்லாத அல்லது வருகைக்கான இசைவுச் சீட்டு அணுகலின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்துள்ளது.
இந்தியாவின் கடவுச்சீட்டானது இசைவுச் சீட்டு இல்லாத, வருகைக்கான இசைவுச் சீட்டு அல்லது மின்னணு-இசைவுச் சீட்டு வசதிகள் மூலம் 56 இடங்களுக்கான அணுகலை வழங்குகிறது.
இந்தியாவின் தரவரிசை முந்தைய 2026 ஆம் ஆண்டு புதுப்பிப்பில் 75-வது இடத்திலிருந்து தற்போது 78-வது இடத்திற்குச் சரிந்துள்ளது; இருப்பினும் இது 2025 ஆம் ஆண்டு (85-வது இடம்) மற்றும் 2021 ஆம் ஆண்டு (90-வது இடம்) ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது முன்னேறியுள்ளது.
2026 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் (1-வது இடம்), ஜப்பான் (2-வது இடம்) மற்றும் தென்கொரியா (3-வது இடம்) ஆகியன முதலிடத்தில் உள்ள கடவுச்சீட்டுகளாகும்.