TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் ஆற்றல் குறித்த முதலாவது சர்வதேச மாநாடு

December 2 , 2021 1613 days 788 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பக்வந்த் கூபா, ஹைட்ரஜன் ஆற்றல் - கொள்கை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சவால்கள் குறித்த ஒரு முதலாவது சர்வதேச மாநாட்டினைப் புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாடானது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறை அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் மற்றும் தேசிய அனல்மின் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் மத்தியப் பாசன மற்றும் எரிசக்தி வாரியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • மின்னாற் பகுப்பிகளை (electrolysers) உற்பத்தி செய்வதன் மீதான செலவினங்களைக் குறைப்பதற்காக ஹைட்ரஜன் ஆற்றல் உற்பத்திக்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டி ஹைட்ரஜன் ஆற்றல் பயன்பாட்டின் எதிர்காலச் சவால்களைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்