TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் உற்பத்தி புத்தாக்க சூழல் மையம்

November 20 , 2025 15 hrs 0 min 19 0
  • மதராசின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக (IIT) வளாகத்தில் ஹைட்ரஜன் புத்தாக்கச் சூழல் மையத்தை நிறுவ ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் IIT மதராஸ் ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்பு, உள்ளூர்மயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பச் சரிபார்ப்பு மூலம் பசுமை-ஹைட்ரஜன் சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
  • மொத்தத் திட்டச் செலவான 180 கோடி ரூபாயின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டத்தின் மூலதனத் தேவைகளுக்கு ஹூண்டாய் நிறுவனம் 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
  • பசுமை-ஹைட்ரஜனை ஏற்றுக் கொள்வதை விரைவுபடுத்துவதற்காக தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசாங்கத்தை உள்ளடக்கிய ஒரு தேசிய தளமாக இந்த மையம் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்