1948 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்பவரால் பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையருக்கு மாற்றப்பட்ட நிதி இந்தியாவுக்குச் சொந்தமானது என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானில் சேருவதற்கான சாத்தியக் கூறுகளின் அனுமானத்தில், நிஜாம் 1948 ஆம் ஆண்டில் 1,007,940 பவுண்டுகள் மற்றும் ஒன்பது ஷில்லிங் ஆகியவற்றை பாகிஸ்தான் உயர் ஆணையருக்கு வழங்கினார்.
சுதேச அரசாக இருந்த ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்த பின்னர், கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த நிதிக்கான உரிமையைக் கோரி வந்தன.
ஏழாவது நிஜாமின் பேரன்களான முக்கரம் ஜா மற்றும் முஃபாக்கம் ஜா ஆகியோரும் இந்த நிதிக்கான உரிமையைக் கோரி வந்தனர்.
1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று தங்களது தாத்தாவால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையினால் இந்த நிதி அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அசல் தொகையானது தற்பொழுது 35 மில்லியன் பவுண்டாக (ரூ. 306 கோடி) அதிகரித்துள்ளது.
பிரிட்டன் நீதிபதியான ஸ்மித் என்பவர் 35 மில்லியன் பவுண்ட் என்ற நிதியானது 7வது நிஜாம், அவருடைய இளவரசர்கள் மற்றும் இந்தியா ஆகியோருக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கு "ஹைதராபாத் நிதி வழக்கு" என்று பிரபலமாக அறியப்படுகின்றது.