ஆந்திரப் பிரதேச முதல்வர் ஹோப் தீவில் ஒரு புதிய விண்வெளி நிலையம் அமைக்கப் படும் என்று அறிவித்தார்.
இந்த விண்வெளி நிலையம் முக்கியமாக விண்வெளி நகர முன்னெடுப்பின் கீழ் தனியார் ஏவுதளப் பணிகளை ஆதரிக்கும்.
இது சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) மற்றும் குலசேகரப்பட்டினம் சிறிய செயற்கைக்கோள் ஏவுதளம் (SSLV) வளாகத்துடன் இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த மையம் வணிக மற்றும் தனியார் ஏவு பணிகளுக்கான சிறிய மற்றும் நடுத்தர எடை சுமப்பு கல ஏவுதள வாகனங்களில் கவனம் செலுத்தும்.
ஹோப் தீவு வங்காள விரிகுடாவில் காக்கிநாடா கடற்கரையில், கோரிங்கா வனவிலங்குச் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
அதன் அமைவிடம் திறம் மிக்க கிழக்கு நோக்கிய ஏவு வாகன ஏவுதல்களுக்கு உதவுகிறது மற்றும் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை வளர்ச்சியை ஆதரிக்கிறது.